விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா

சென்னை: ''விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; அவ்வாறு வரும் தகவல்கள் வெறும் வதந்தி'' என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நோய் தடுப்பின் அவசியத்தை உணர்ந்ததால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதேநேரம் நாய் பூனை உள்ளிட்ட செல்ல விலங்குகள் எந்த கவலையும் இன்றி சுற்றித்திரிந்தன. இந்த விலங்குகளால் நோய் தொற்று பரவாதா என்ற கேள்வி எழுகிறது.