சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(மார்ச் 23) காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.
பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு, பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், நேற்று இரவு, 9:00 மணிக்கு நிறைவடைய இருந்த நிலையில், மக்கள் நலன் கருதி, இன்று காலை, 5:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு தொடரும் என, தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது