ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள்

ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம். மற்ற நாடுகளை விட கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா நடத்தி வருகிறது. தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலேலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சவால்களை சமாளிக்க அம்பேத்கரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது.

மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே. 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு மிக அவசியமானது.
இவ்வாறு மோடி பேசினார்.